தஞ்சாவூர் பிப்.14.
தஞ்சாவூர் அருகே உள்ள திருக்கானூர்பட்டியில் ரூபாய் 7.36 கோடியில் பால் பொருள்கள் பண்ணையை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்.
விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார் எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன் டி கே ஜி நீலமேகம், ஆவின் பொது மேலாளர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பால் பொருள் களில் பண்ணையினை திறந்து வைத்து ,குத்துவிளக்கேற்றி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது.
தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் தஞ்சாவூர் திருவாரூர் நாகை மயிலாடுதுறை மாவட்டங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது தற்போது 422 பிரதம பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 63 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப் பட்டு வருகிறது. 9 தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள்மூலம் 48 ஆயிரம் லிட்டர் பால் குளிரூட்டப் பட்டு தஞ்சாவூர் மத்திய பண்ணை க்கு கொண்டுவரப்படுகிறது
தஞ்சாவூர் மத்திய பண்ணையில் 9 பால் வழித்தடங்கள் மூலம் தினமும் 15 ஆயிரம் லிட்டர் என மொத்தம் 63 ஆயிரம் லிட்டர் பால் பலப்படுத்தப்பட்டு தரமான பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது .தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜி தேசிய ரூர் பன் இயக்கம் திட்டத்தின் மூலம் ரூபாய் 7 கோடியே 36 லட்சம் மதிப்பில் தஞ்சாவூர் அடுத்துள்ள திருக்கானூர்பட்டியில் பால் பொருட்கள் பண்ணை பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இங்கு பால் பொருட்களான குலோப் ஜாமுன் ,பாதாம் மிக்ஸ் ரசகுல்லா, பால்கோவா, மைசூர்பா தயிர், மோர், பன்னீர் ஆகிய பால் பொருள்கள் அதிநவீன முறையில் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சந்தைப்படுத்தப்பட உள்ளது என்றார்
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன் துணைப்பதிவாளர் கள் வெங்கடேசன் ,சந்திரசேகரராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்