ஈரோடு ஜூலை 23
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈரோடு யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
நான் கடந்த 10 ஆண்டு காலமாக இளைஞர் அணி மாநில தலைவராக செயல்பட்டு வந்துள்ளேன். அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக என்னுடைய மாநிலத் தலைவர் பதவியை த மா கா தலைவர் ஜி.கே வாசனிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தேன் தொடர்ந்து இயக்கத்தின் வளர்ச்சிக்காக தலைவர் ஜி.கே வாசன் தலைமையின் கீழ் பயணிப்பேன்.
அரசியலில் கடந்த 15 ஆண்டு காலமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக இரண்டு முறை நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி மாநில தலைவராக 10 ஆண்டு காலம் செயல்பட்டு வந்துள்ளேன். கடந்த 15 ஆண்டு காலமாக இளைஞர் அணி செயல்பாட்டில் முழுவதுமாக என்னை ஈடுபடுத்தி கொண்டேன். கட்சிக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் நோக்கில் தமாகா தலைவர் ஜி.கே வாசன் எடுக்கக்கூடிய முடிவுக்கு முன் மாதிரியாக இந்த ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளேன். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.