தென்தாமரைகுளம்., அக்.19.
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் கல்லூரி தேசிய மாணவர் கப்பல் படை பிரிவு சார்பில் இணைய வழி குற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் பொறுப்பு ஜெயந்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ண ராணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் .கல்லூரி துறை தலைவர்கள் பேராசிரியர் டி. சி. மகேஷ்,பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி ஆகியோர் வாழ்த்தி பேசினர். கருத்தரங்கு ஏற்பாடுகளை கல்லூரி தேசிய மாணவர் படை கப்பல் பிரிவு அதிகாரி ஆ. பிரபுமாறச்சன் செய்திருந்தார்.