நித்திரவிளை, ஜன-28
நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் தாசன் (70). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் . இவருக்கும் அதே ஊரை சேர்ந்த உறவினர்களுக்கும் சொத்து சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி காலை கிராத்தூர் பகுதியை சேர்ந்த கபரியேல் (60) என்பவர் பிரச்சனைக்குரிய நிலத்தில் புல் புதர்களை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற தாசன் நிலத்தை விட்டு வெளியே செல்லுமாறு கபரியேலிடம் கூறியுள்ளார்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் வைத்திருந்த வெட்டுக்கத்தியால் தாசனின் தரையில் கபரியேல் வெட்டி உள்ளார். இவர் காயம் அடைந்த தாசன் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.