தஞ்சாவூர். செப்.12.
தஞ்சாவூரில் முதல் -அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் 3300 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. இந்த போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் அரசு தலைமை கொறடா கோவி .செழியன் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து ஆக்கி, கபடி, நீச்சல், மேஜைப்பந்து வாலிபால், கேரம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டி ஆகியவை விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதே போல் பரிசுத்தம் பொறியிய ல் கல்லூரியில் கால்பந்து போட்டி யும் பூண்டி புஷ்பம் கல்லூரி, செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் போட்டியும், பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் கைப்பந்து போட்டியும், நவபாரத் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் கோகோ விளையாட்டுப் போட்டிகள் நடை பெறுகிறது .இந்த போட்டிகளில் 3300 வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
பள்ளி மாணவமாணவியர்களு க்கு 13, 14ம் தேதிகளில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் தடகளப் போட்டிகள் நடக்கிறது.
கூடைபந்து போட்டி, ஆக்கி போட்டி, கபடி ,நீச்சல் ,கேரம், வாலிபால், நீச்சல் போட்டி ஆகியவை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்திலும் கிரிக்கெட் போட்டி பூண்டி புஷ்பம் கல்லூரி, மருத்துவக் கல்லூரியிலு ம், கால்பந்து போட்டி பரிசுத்தம் பொறியியல் கல்லூரியில் நடக்கிறது .இந்த போட்டி வருகிறது 24 ஆம் தேதி வரை நடை பெறு கிறது.
தொடக்க விழாவில் டி கே ஜி நீலமேகம் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி துணை மேயர் அஞ்சுகம் பூபதி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர் தொடக்கத்தி ல் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் அனைவரையும் வரவேற்றார் .முடிவில் நீச்சல் பயிற்றுனர் ரஞ்சித் குமார் நன்றி கூறினார்.