திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் கடலூர் மாவட்டத்தில் செல்லதுரையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக வி.சி.க கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாமக வினர் கண்டன ஆர்ப்பாட்டம்! ஆதிதிராவிடர் மாணவனை அடித்திருந்தால் ஊடகம் லோ…லோன்னு ஊடகங்கள் ஓடி இருக்கும் என பாமக மாவட்ட செயலாளர் டி.கே.ராஜா தலைமை தாங்கி ஆவேச கண்டன உரை!
திருப்பத்தூர்:நவ:07, திருப்பத்தூர் மாவட்டம் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் டி கே ராஜா தலைமையில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கடலூர் மாவட்டம் பஞ்சு கொள்ளை குப்பம் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை விசிக கட்சியினை சேர்ந்த சிலர் தாக்கியதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மஞ்சக்கொள்ளை செல்லத்துரையை கொடூரமாக தாக்கிய கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் கோசங்களை எழுப்பினர். வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியை கொலை மிரட்டல் விடுத்ததாகவும் , கொலை மிரட்டல் விடுத்த அனைவரையும் உரிய சட்டப்பிரிவுகளில் கைது செய்வது மட்டுமின்றி, பொது அமைதியை குலைக்க முயன்றதற்காக அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். அடுத்த 24 மணி நேரத்தில் இந்த நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை தடைகள் போடப்பட்டாலும் அவற்றை மீறி தமிழ்நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களை பா.ம.க. முன்னெடுக்கும் என்று கண்டன உரை ஆற்றினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் டி.கே. ராஜா பேட்டி அளிக்கையில்: எங்கள் வன்னியர் மக்களுக்கு ஏதேனும் நடந்தால் நாங்களும் அட்ஙக மறுப்போம்! அத்து மீறுவோம்! ஆதிதிராவிடர் மாணவனை அடித்தால் மொத்த ஊடகமும் ஓடுகிறது, எங்களுக்கு பாதிப்பு என்றால் எந்த ஊடகமும் கண்டுக்கொள்வதில்லை. நாங்களும் மோதுவோம் , நாங்கள் சிங்கங்கள் எனவும் ஆதிதிராவிடர் மக்கள் PCR – வழக்கை பொய்யாக பயன்படுத்துகிறார்கள் அவர்களே அடித்துக்கொண்டு அவர்களே பொய் வழக்கு போடுகிறார்கள். மேலும் ஆளும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ன செய்தாலும் பாதுகாப்பு அளிக்கிறது. நடிகர் விஜய் வந்துட்டான் அதனால் விசிகவினருக்கு பயம் வந்துவிட்டது. 2026- சட்டமன்ற தேர்தலில் ஆட்டம் காணும் என்று பேசினார். இந்த ஆர்பாட்டத்தில் மாநில மகளிர் அணி தலைவி நிர்மலா ராசா மற்றும் பொன்னுசாமி, குட்டிமணி, ஜோலார்பேட்டை நகர செயலாளர். ஞானமோகன் மற்றும்
மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ஆனந்தன் மற்றும் பாமக மாவட்ட மாணவர் அணி செயலாளர் கிருஷ்ணன் மற்றும் வன்னிச்சங்கம் பாமக கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர். பிரதான சாலை என்பதால் சாலையில் வாகன ஓட்டிகள், பேருந்துகள் செல்வதற்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சில பாமக கட்சி உறுப்பினர்கள் சாலையில் நின்றுக்கொண்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.