சென்னையில் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த தின கிரிக்கெட் போட்டி துவக்க விழாவில் எம்எல்ஏ ராஜா பங்கேற்பு/
சென்னையில் நடைபெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், திமுக அணிகளுக்கு இடையேயான ‘தலைவர் 72’ மாபெரும் பகல் – இரவு கிரிக்கெட் போட்டியை இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு தொடங்கி வைத்து, டி சர்ட்டை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த தொடக்க விழாவில் விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளரும், எம்பியுமான தயாநிதி மாறன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில்பாலாஜி, டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி ஆகியோர் முன்னிலையில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வரவேற்பு அளித்து வாழ்த்து பெற்றார்.