வேலூர்.வி.வி. என்.கே.எம். பள்ளியில் நடைபெற்ற சிபிஎஸ் கிளஸ்டர் மாநில அளவிலான கபடி போட்டியில் 15 வயது குட்பட்ட பிரிவில் 72 பள்ளிகள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் மதுரை
நாகமலை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள
கே.எம்.ஆர். சர்வதேச பள்ளி மாணவர்கள் பங்கேற்று போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்தனர். மேலும் சிபிஎஸ்சி கிளஸ்டர் மாநில அளவிலான கபடி போட்டியில் மதுரையைச் சேர்ந்த ஒரு பள்ளி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் வெற்றி பெற்ற மாணவர்கள்
மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணவேணி, முதன்மை முதல்வர் விஜயா சுந்தர்,
பள்ளி முதல்வர் சரஸ்வதி,
ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.