ஈரோடு. பிப்.7-
ஈரோடு கிழக்கு தொகுதி
இடைத்தேர்தல் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது .இதை தொடர்ந்து மின்னணு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் இடமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உள்ள அறைகளில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த அறைகள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்குகள் நாளை (8-ந் தேதி) எண்ணப்படுகிறது.
இதை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாது காப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் சித்தோடு அரசு என் ஜினீயரிங் கல்லூரியை சுற்றி லும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து போலீசார்
கூறும்போது, ‘சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும்மையத்தில்
5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
மத்திய தொழில் பாது காப்பு படையினர், பட்டாலியன் போலீசார், ஆயுதப்படை போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார் போக்குவரத்து போலீசார் இரவு பகலாக 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் இவர்களுக்கு ஷிப்ட் முறையில் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேலும் அன்று ஈரோடு கிழக்கு தொகு திக்குட்பட்ட முக்கியமான இடங்கள், கட்சி அலுவலகங்கள், தலைவர்களின் சிலைக ளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இதுதவிர அதி ரடிப்படையினரும் தயார் நிலையில் இருப்பார்கள். பிரச் சினை ஏற்படும் இடங்களுக்கு அவர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறினர்.
வாக்கு எண்ணும் சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் ஓட்டு எண்ணும் அறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.