பூதப்பாண்டி – செப்டம்பர் – 13-
குமரி மாவட்டம் கீரிப்பாறையை அடுத்துள்ள வெள்ளாம்பி மலை பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக அழகிய பாண்டியபுரம் வனச்சரக அலுவலகத்திற்க்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அழகிய பாண்டியபுரம் வனச்சரகர் கலையரசன் வனத்துறையினருடம் சம்பந்தபட்ட இடத்திற்க்கு சென்று சோதனை செய்தார்.அதில் வெள்ளாம்பி பகுதியை சேர்ந்த ராமர் கானி (49) என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதற்க்கான பொருட்கள் மற்றும் ஊரல்களும் ஒரு தள்ளுவண்டியினுடைய அடியில் ஒளித்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் உத்தரவின் பேரில் ராமர் காணிக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய்அபராதமும் இனி சாராயம் காய்ச்ச மாட்டேன் என்று மன்னிப்பு கடிதமும் வாங்கி வனத்துறையினர்எச்சரித்து அனுப்பினர்.