இராமநாதபுரம் ஆகஸ்ட் 20-
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏர்வாடி ஊராட்சியில் எந்த ஒரு முன்னறிவிப்பின்றி கிராம சபை கூட்டம் நடைபெற்றதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
. சுதந்திர தின விழாவை முன்னிட்டும் தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பை தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஏர்வாடியில் ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் செய்யாமல் குறிப்பிட்ட நபர்களை வைத்து கிராமசபை கூட்டம் நடத்தியதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தொடர்பாக பொதுமக்கள் தெரிவிக்கையில் ஏர்வாடி ஊராட்சியில் சுமார் 12,000 க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் பஞ்சாயத்து சட்டத்தின்படி கிராமசபை கூட்டத்திற்கு 300 நபர்கள் பங்கு பெற வேண்டும் என்ற நிலையில் முப்பது நபர்களை வைத்து கிராமசபை கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. அதேபோல் கிராம சபை கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் அறிவிப்பு பலகை வைத்திருக்க வேண்டும் ஆனால் எந்த ஒரு அறிவிப்பு பலகையும் வைக்காமல் பொதுமக்கள் கேட்கும் வரவு செலவுக்கு முறையாக பதிலளிக்காமல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கிராம மக்கள் அவரவர் பகுதியில் என்னென்ன பணிகள் நிறைவு பெற்றது அதற்கான வரவு செலவு என்ன என்ற கணக்கு கேட்டதற்கு ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரும் சொல்ல மறுத்து விட்டனர். இதனால் ஊராட்சி மன்ற தலைவருக்கும் கிராம பொதுமக்களுக்கும் காரசாரமான விவாதங்கள் நடந்தது.. தொடர்ந்து
ஏர்வாடி தர்கா பகுதியில் தனியார் கிளினிக் நடத்துபவர் ஹோமியோபதி டாக்டர் ஆவார் இவர் எப்படி இங்கிலீஷ் மருந்துகள் வழங்கப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டால் அது என்னுடைய வேலை இல்லை என்று மிக அலட்சியமாக பதில் கூறிவருகிறார்.
ஏர்வாடி தர்கா புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள இ சேவை மைய கட்டிடத்தின் அருகில் அங்கன்வாடி உள்ளது இங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர் அங்கு பணிபுரியும் அங்கன்வாடி பணியாளருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருகிறது, பேருந்து நிலையம் அருகில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை இ -சேவை மையம் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்துக்குள் மது பாட்டில்களை உடைத்து போட்டு சென்று விடுகின்றனர். இது மறுநாள் காலையில் அங்கன்வாடிக்கு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கால்களை பதம் பார்த்துவிடுகிறது. அதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை பொதுமக்கள் வைத்தனர் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது என்று மழுப்லாக பதில் கூறி வருவதாகவும் தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தலைவர். ஏர்வாடி பகுதிகளில் பல இடங்களில் பைப் லைன்கள் போட்டதாக கூறி பல முறைகேடுகள் நடைபெற்று உள்ளது அதற்கான வரவு செலவு கணக்குகளை கேட்டால் தர முடியாது என்று சொல்கிறார். மேலும் ஏர்வாடி ஊராட்சி மூலம் கிராம சபை கூட்டத்தில் 40க்கு மேற்பட்ட தீர்மானங்களை அவர்களாகவே தயார் செய்து வந்துள்ளனர். கிராம சபை கூட்டத்தில் யாரிடமும் எந்த ஒரு கையெழுத்தும் பெறவில்லை அதனால் அவர்கள் ஏற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஏர்வாடியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர் சார்பாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.