ஊட்டி.ஜன. 21.
உதகை ரயில் நிலையம் முன்பு இயங்கி வரும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள நடைபாதையில் குடிமகன்களின் கூடாரமாக மாறிவரும் அவல நிலையாக மாறி நடைபாதை மாசடைந்து வருகிறது.
ஊட்டி நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு நல வாழ்வு மைய நடைபாதை அருகிலேயே அரசு மதுபான கடையும் இயங்கி வருகிறது. இதன் அருகே நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருவதால் இந்த பகுதிக்கு செல்லவே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்நிலையிலும்
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் வந்து சிகிச்சை எடுத்து செல்கின்றனர்.
இந்நிலையில் சுகாதார நிலையம் அருகே உள்ள நடைபாதையை குடிமகன்கள் ஆக்கிரமித்து அங்கேயே நின்று மது அருந்தி விட்டு மது பாட்டில்கள் டம்ளர்கள் உள்ளிட்டவற்றை அங்கேயே வீசிவிட்டு செல்வதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருவதாகவும்
எனவே இப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.