சிவகங்கை அரண்மனை வாசலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு மூன்று இந்திய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்ததைக் கண்டித்து இந்த நகல்
போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது.
இந்த போராட்டத்தின் போது அரசியல் சட்ட உரிமைகளை பறிக்காதே காவல்த்துறைக்கு அதிகமான அதிகாரங்களை வழங்காதே என கோசங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் இந்தப் போராட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் கோபால் உட்பட மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.