அக். 29
போய நாயக்கர் சமுதாய ஒருங்கிணைப்பு நல சங்க பொதுக்கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருப்பூர் கோவில் வழி அருகே உள்ள மண்டபத்தில் போய நாயக்கர் சமுதாய ஒருங்கிணைப்பு நல சங்க கூட்டம். நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட போயநாயக்கர் சங்க தலைவர்
வி பி அழகையன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி வரவேற்றார். கூட்டத்தில் துணைத் தலைவர் ராஜ்,
துணை செயலாளர் தங்கராஜ், பரமசிவம், முத்துப்பாண்டி, விக்னேஷ் குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழைக்கும் மக்கள் விடுதலைக்காக நிறுவனத் தலைவர் தேக்கமலை கோரிக்கைகளை விலக்கிப் பேசினார். கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும் மாநகராட்சி 4ம் மண்டல தலைவருமான இல.பத்மநாதன் திமுக தெற்கு மாநகர செயலாளர்
டி .கே .டி நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் கலந்துகொண்டு பேசியதாவது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் வீடு கட்டுவது என்பது கனவாக இருக்கும் அந்த கனவுகளை எல்லாம் நிறைவேற்றக்கூடிய வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் ஒரு நாடு செழிக்க வேண்டும் என்றால் தொழில் கல்வி விவசாயம் சிறக்க வேண்டும் தமிழகத்தில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களை எல்லாம் அருகில் உள்ள மாநிலங்கள் செயல்படுத்தக்கூடிய நிலையில் திட்டங்கள் அமைந்துள்ளது. திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் போய நாயக்கர் சமுதாயத்திற்கு நல வாரியம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். என்ற கோரிக்கைகளை நிறைவேற்றி சமுதாய மக்களின் வாழ்வு மேம்படுவதற்கு உறுதுணையாக இருப்போம் இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பெரியகுளம் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் திருப்பூர் மாவட்ட செயலாளர்
எம். பி .ராஜாராம் நன்றியுரை வழங்கினார்.