திண்டுக்கல் குயின்சிட்டி சங்கமும், இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து, குக் வித் ஜாலி என்ற சமையல் போட்டி டிசம்பர் 1ஆம் தேதி திண்டுக்கல் ஆர்.கே.ஜி.ஹாலில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்த பெண்கள் ஆர்வமாக கலந்துகொண்டு பரிசுகளை பெற்றார்கள்.
எல்ஜிபி கேஸ் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதை வலியுறுத்தியும் இந்தியா முழுவதும் எரிவாயு நிறுவனங்கள் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
அடிப்படை பாதுகாப்பு சோதனை பிரச்சாரம் மார்ச் 5, 2024 இல் எண்ணெய் நிறுவனங்களால் துவங்கப்பட்டது. பயிற்சி பெற்ற ஊழியர்களால் நடத்தப்படும் வீட்டுவசதி ஆய்வுகள் மூலம் 12 கோடி வீடுகளை உள்ளடக்கியது. எல்பிஜி நிறுவனங்களில் ஒவ்வொரு வீடுகளிலும் எல்பிஜி குழாய்களால் ஆபத்துக்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த ஆய்வுகள் இலவசமாக உள்ளன. தற்போது வரை, 8 கோடி வீடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன, இதன் விளைவாக சுமார் 3.5 கோடி குழாய்கள் மாற்றப்பட்டுள்ளன.
இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட குக் வித் ஜாலி என்ற நிகழ்வில் பெண்களுக்கு எல்ஜிபி எரிவாயு குழாய்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை அசிஸ்டன்ட் மேனேஜர் ராகேத் அவர்கள் விளக்கினார். புரதச்சத்துக்கள் நிறைந்த சைவ உணவுகள் போட்டியில் விதவிதமாக செய்யப்பட்டன. முதல் பரிசாக சுஜிதா
5000 மதிப்புள்ள பட்டர்பிளை அடுப்பினை பெற்றார். இரண்டாம் பரிசாக ப்ரீத்தி ரூபாய் 3500 மதிப்புள்ள பட்டர்பிளை அடுப்பினை பெற்றார்.
மூன்றாம் பரிசாக செண்பா
ரூபாய் 2600 மதிப்புள்ள பட்டர்பிளை அடுப்பினை பெற்றார். இதில்
சிறப்பு பரிசாக கிருஷ்ணவேணி ராஜேந்திரன் அவர்களுக்கு 2000 ரூபாயும் வழங்கப்பட்டது.மேலும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு சுகர் டஸ்ட் நிறுவனத்தின் உரிமையாளர் செஃப் நிஹந்த்ரீ, பிங்க் மற்றும் எசன்சியல்ஸ் உரிமையாளர் Rtn. சித்ரா ஜெயன் மற்றும் ராஜி கிச்சன் உரிமையாளர் Rtn. ராஜாத்தி அவர்களும் நடுவராக இருந்து பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுத்தார்கள். இந்நிகழ்விற்கு
உதவி ஆளுநர் சித்ரா ரமேஷ் தலைமை தாங்கினார். குயின் சிட்டி தலைவர் Rtn.கவிதா செந்தில்குமார், செயலர் Rtn. பார்கவி, குக் வித் ஜாலி நிகழ்வின் சேர்மன் Rtn.டாக்டர். ஷர்மிளா பாலகுரு அவர்களும் குயின் சிட்டி சங்கத்தின் உறுப்பினர்களும், பார்வையாளர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
இந்த நிகழ்வில் கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வும் அதற்கு குயின் சிட்டி சங்கம் நடத்தி வரும் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டமான செர்வி க்யூர் பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.