விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள காளையார் குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
விருதுநகர் மாவட்டத்தில் அதிகமாக பட்டாசு ஆலைகள் உள்ளது. இவற்றில் இருந்து கடந்த நான்கு மாதங்களில் நடைபெற்ற வெடிவிபத்தில் பலர் உயிரிழந்துள்ளார்கள். விபத்தின் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இன்று வரை தொடர்ந்து பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்ந்தவாறு உள்ளது. இந்த நிகழ்வு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் செயலற்று இருப்பதை காட்டுகிறது.
இனிமேலும் தாமதம் இல்லாமல் அனுமதிப்பெற்ற அனுமதி பெறாத பட்டாசு ஆலைகளை கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கோட்பாடுகளையும் கடைப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலிறுத்த வேண்டும் மீண்டும் இது போல் ஒரு விபத்து நடைபெறாதவாறு தமிழக அரசு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடை தமிழக அரசு உடனடியாக வழங்கவும் காயம் அடைந்தவர்களுக்கு உரிய உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.