திருவாரூர் மாவட்டம்
புதிய இரயில் நிலையத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவாரூர் புதிய இரயில் நிலையத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்
தி.சாருஸ்ரீ,
கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேலுடையார் மேல்நிலைப்பள்ளி, ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தியாகராஜர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி உள்ளிட்ட பள்ளி கல்லூரிகளைச்சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், பங்கேற்றனர். மேலும்
நுகர்வோர் தின விழாவின் நோக்கமானது நுகர்வோர் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திடவே. நுகர்வோர் என்றால் பணம் கொடுத்து பொருளை வாங்குபவர், பணம் கொடுத்து சேவை பெறுபவர் நுகர்வோர் ஆவார். அந்த வகையில் அனைத்து குடிமக்களும் நுகர்வோரே நுகர்வோர் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பதற்காக நுகர்வோர் தினம் கொண்டாடப்படுகிறது.
மாணவ, மாணவியர்கள் நுகர்வோர் உரிமைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் பள்ளி, மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கல்வி கற்றலில் முதன்மையாக திகழ வேண்டும் கல்வியில் தங்களது சந்தேகங்களை தயக்கமின்றி கேட்டறிந்து கொள்ள வேண்டும்
உயிருக்கும் உடைமைக்கும் விளைவிக்கின்ற பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு எதிராக நுகர்வோர் பாதுகாக்கப்பட வேண்டும் நியாயமற்ற வணிக நடவடிக்கைகளிலிருந்து நுகர்வோர் பாதுகாப்பு பெற பொருட்களின் தரம், அளவு, வீரியம், தூய்மை நிலை, விலை ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.
இப்பேரணியானது, திருவாரூர் புதிய இரயில் நிலையத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக திருவாரூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றடைந்தது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் செல்வபாண்டி, வட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சங்கர், வட்ட வழங்கல் அலுவலர் பூபதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.