கரூர் – செப் – 10
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனைகூட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
சிறுபான்மையினருக்கான தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையின ஆணையத்தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையின ஆணையத்தின் தலைவர் ரெவரென்ட் பாதர் அருண், துணைத் தலைவர் அப்துல் குத்தூஸ், சிறுபான்மையின ஆணைய உறுப்பினர்-செயலர் சம்பத் மற்றும் ஆணையக் குழுவின் உறுப்பினர்கள் வருகிற 28-ந்தேதி அன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்.
சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையினத்து மக்கள் பிரதிநிதிகளையும் 28-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கான தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனர்.
அதுசமயம், சிறுபான்மையினருக்கான தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நல திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினர் இனத்தைசேர்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகளிடம் மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழுவினர் சந்தித்து அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும்,தங்களது குறைகளையும், சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான தக்க கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.