கீழக்கரை செப் 24-
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நலன் சார்ந்த கலந்தாய்வு கூட்டம் அனைத்து சமுதாய கூட்டமைப்பு அலுவலகத்தில் முகைதீன் இப்ராகீம்,அபுபக்கர் சித்தீக் ஆகியோர் ஒருங்கிணைப்பில் தாஜுல் அமீன்,அப்துல் காதர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பவுசுல் அமீன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மக்கள் நலன் பாதுகாப்பு கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் வழங்கிய தகவல்கள் முறையாக நடைமுறைக்கு வருகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று கலந்தாய்வு செய்யப்பட்டது.
கீழ்க்கண்ட பல்வேறு மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மனு அளிக்கப்பட்டதன் விவரம்
கீழக்கரையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாய்களை அகற்ற வேண்டும்.
கீழக்கரை பிரதான சாலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.
தற்போது ஆதார் கார்டு புதுபிக்கும் பணி நடைபெற்று வருகிறது மேலும் பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் ஆதார் மையம் அமைக்க வேண்டும்.
தில்லையோந்தல் பஞ்சாயத்திற்கு உள்பட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை சில மீட்டர் தூரம் உள்ள சாலையை சீரமைக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழக்கரை வழியாக கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் தொலைதூரங்கள் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் வரை வர வேண்டும். இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வரை தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படும் பள்ளங்களை சீரமைக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க இந்த அனைத்து பணிகள் சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர்,துறை அதிகாரிகளை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதில் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஊர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.இந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் எதிர்காலத்தில் பொதுமக்கள் நலன் சார்ந்த கூட்டங்களை நடத்தி விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் முஹம்மது சுல்தான் நன்றி கூறினார்.