வத்தலக்குண்டு தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு தனியார் மஹாலில் தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வதிலை செல்வம் தலைமை வகித்தார். மேலும் தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வதிலை செல்வத்தின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வத்தலக்குண்டு காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியினர் ஊர்வலமாக காரில் அய்யம்பாளையம் பிரிவை அடைந்தனர். அங்கு தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வதிலை செல்வத்திற்கு கிரேன் மூலம் 200 கிலோ பூவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான மாலை அணிவித்தனர். பின்பு ஜேசிபி இயந்திரம் மூலம் 250 கிலோ ரோஜா, செவந்தி மலர்களை கொட்டி வரவேற்பு அளித்தனர். பின்பு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டத்தில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் மற்றும் உள்ளாட்சி தேர்தலிலும் தலைமை அறிவிப்பின்படி போட்டியிடுவது என முடிவு செய்தனர். இந்த நிகழச்சியில் செல்லம்பட்டி சேர்மன் மணிகண்டன், மற்றும் தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில, மாவட்ட, நகர
ஒன்றிய கிளைக்கழக சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். இந்நிகழ்சசியில் தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் வதிலை செல்வத்திற்கு 6 அடி உயர செங்கோல் வழங்கப்பட்டது. இந்நிகழ்சசியில் தொணடர்கள் மற்றும் சமுதாய பற்றாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சதன் வேட்டையன் நன்றி கூறினார்.