களியக்காவிளை, ஜன,27 –
குரியன்விளை, ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலில் நடக்கும் 12-வது பஞ்சபூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகத்திற்கான ஆலோசனை கூட்டம் கோயில் வளாகத்தில் நடந்தது.
களியக்காவினை அருகே பாத்திமா நகர், குரியன் விளையில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வரும் ஏப்ரல் 27-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை 12-வது பஞ்சபூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம் நடக்கிறது. யாகத்திற்கான ஆலோசனை கூட்டம் கோயில் வளாகத்தில் நடந்தது.
கூட்டத்தில் கோயில் நிர்வாக தலைவர் விக்கிரமன் சுவாமி தலைமை வகித்தார். செயலாளர் சாந்தகுமார், பொருளாளர் சசி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கோயில் திருவிழா கமிட்டி தலைவர் ஸ்ரீகண்டன் நாயர், ஓய்வு பெற்ற சப் -இன்ஸ்பெக்டர் செல்வமணி, ஓய்வு பெற்ற தீயனைப்பு துறை அலுவலர் பிரதாப குமார். உள்ளிட்டோர் பேசினர். கோயில் திருவிழா கமிட்டி செயலாளர் விஷ்ணு கோயில் திருவிழா தீர்மான அறிக்கை வாசித்தார். 12-வது பஞ்ச பூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் வக்கீல் செல்வகுமார், கோயில் நிர்வாக கமிட்டியினர் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.