மதுரை பிப்ரவரி 27,
மதுரை மாவட்டத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் வாக்காளர் பட்டியல், வாக்கு மையம் நிலை அலுவலர்கள் மற்றும் வாக்காளர் விழிப்புணர்பு தொடர்பாக
நடைபெற்று வரும் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகர காவல் ஆணையர் முனைவர்.லோகநாதன், கூடுதல் ஆட்சியர் டாக்டர்.மோனிகா ராணா, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் என்.ராகவேந்திரன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.