மதுரை பிப்ரவரி 26,
மதுரை மாவட்டம் கோர்ட்யார்ட் மாரியாட் ஹோட்டலில் மதுரை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்துதல் குறித்து, தொடர்புடைய அலுவலர்களுடான ஆலோசனைக்கூட்டம் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எ.ஏ.சித்திக் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுணன் தலைமை பொது மேலாளர்கள் ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), டி.லிவிங்ஸ்டன் எலியேசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிதரா விஜயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மோனிகா ராணா, உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால், மாவட்ட வருவாய் அலுவலர் நா.ராகவேந்திரன் ஆகியோர் உடன் உள்ளனர்.