மதுரை டிச 21
மதுரை தொழிலாளர் நல அலுவலகத்தில்
தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் அரசு நிருவாகம் முழுமையாகத் தமிழில் மேற்கொள்ளப்பெற வேண்டும் என்ற சீரிய நோக்கில் 27.12.1956. இல் சட்டமன்றத்தில் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டதை நினைவு கூரும் வகையில் எல்லா மாவட்டங்களிலும் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 18.12.2024 முதல்
27.12.2024 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் இரண்டாம் நாள் நிகழ்வாக 19.12.2024 அன்று ஆட்சிமொழிச் சட்டம் குறித்தும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்தும் கலந்தாய்வுக் கூட்டம் தொழிலாளர் இணை ஆணையர் பெ.சுப்பிரமணியன். தலைமையில் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் குறித்து மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் ம.சுசிலா விளக்கவுரை நிகழ்த்தினார்.
இதில் மதுரை மாவட்டத் தொழிலாளர் துணை ஆணையர், உதவி ஆணையர்கள், துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் வணிகர் சங்கத்தினர். வணிக நிறுவன உரிமையாளர்கள். கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் ம.சுசிலா சிறப்பாக செய்திருந்தார்.