தஞ்சாவூர். ஜூன் 1
தஞ்சாவூரில் வாக்கு எண்ணிக்கை விதிமுறைகள் குறித்து கலந்தாய்வு க் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது.
தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும்உள்ள அறையில் வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்க ப்பட்டுள்ள கல்லூரி வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது. சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தீவிர கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வாக்கு எண்ணி க்கை வருகிற 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடக்கிறது இதையொட்டி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ,வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடை பிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த கலந்தாய் வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜன், பயிற்சி ஆட்சியர் உத்தாஷ்குமார் ,போலீஸ் சூப்பிரண்ட் ஜெயசந்திரன் ,உதவி தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர் களின் முகவர்கள் கலந்து கொண்டனர்