கிருஷ்ணகிரி ஆக22: கிருஷ்ணகிரி நகராட்சியில் நகர மன்ற தலைவர் பரிதாநவாப் தலைமையில் டெங்கு பரவலை தடுக்கின்ற வகையில்
டிபிசிபணியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டெங்கு பரவாமல் தடுக்கின்ற வழிமுறைகள் குறித்து நகர மன்ற தலைவர் டி.பி.சி பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து நகராட்சி சார்பில் மகளிர் சங்கங்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐந்து மகளிருக்கு தனிநபர் கடன் ரூபாய் 20ஆயிரத்தை, இந்தியன் வங்கியின் மூலமாக வழங்கப்பட்ட காசோலையை நகர் மன்ற தலைவர் பரிதாநவாப் பயனாளிகளுக்கு வழங்கினார்.