சங்கரன்கோவில்.ஜூலை.17.
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி குருவிகுளம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள கீழ அழகு நாச்சியாபுரம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து 30 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் .
இதில் ஒன்றிய பெருந்தலைவர் விஜயலட்சுமிகனகராஜ் ,மாவட்ட கவுன்சிலர் சுதாபிரபாகரன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை ,ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்விபாலசுப்ரமணியன், முத்துலட்சுமிகண்ணன், கணேசன், மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர், மதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட பிரதிநிதி ராஜகுலராமபாண்டியன், ஒன்றிய மாணவரணி செந்தில்நாதன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் மலைபட்டி மாடசாமி, கிருஷ்ணசாமி, மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன், ஒன்றிய இளைஞர் அணி குட்டி, வாகைகுளம் சதிஷ் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கீழ அழகு நாச்சியார்புரம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஜோதி தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.