மார்ச்:5
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மாண்புமிகு மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இன்று (04.03.2025) திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், நவனாரி ஊராட்சி, கள்ளிப்பாளையத்தில் நீர்வளத்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் உப்பாறு ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியினை துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஃபெலிக்ஸ்ராஜா குண்டடம் மேற்கு ஒன்றிய தலைவர் சந்திரசேகர், ஒன்றிய தலைவர்கள் கழக நிர்வாகிகள், கண்காணிப்பு பொறியாளர் (நீர்வளத்துறை) கார்த்திகேயன், செயற்பொறியாளர் மகேந்திரன் ஆகியோர் உள்ளனர்.