சேர்ந்த மரம் பங்கு புது கிராமத்தில்
புனித சந்தியாகப்பர் ஆலய அர்ச்சிப்பு விழா எம் எல் ஏ ராஜா பங்கேற்பு தென்காசி வடக்கு மாவட்டம் மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றியம்
சேர்ந்தமரம் பங்கு புது கிராமம் புனித சந்தியாகப்பர் ஆலய அர்ச்சிப்புவிழா வெகு விமர்சையாக நடந்தது. பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் முனைவர். அந்தோனிசாமி தலைமை வகித்தார்.
இந்திய நார்பட் சபை தலைவர் அருள் அமல்ராஜ், பாளை மறை மாவட்ட முதன்மைக்குரு குழந்தை ராஜ் , பொருளாளர்
அந்தோனிசாமி, சங்கரன்கோவில் மறை மாவட்ட அதிபர் ஜோசப் கென்னடி, பாளை மறை மாவட்ட பொறியாளர் ராபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சேர்ந்தமரம் பங்கு தந்தை ஜெகன் ராஜா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மேல நீலிதநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்,மேல நீதிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, குருவிகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் உள்பட திமுக மாவட்ட ஒன்றிய நகர கிளை வார்டு பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் நிர்வாகிகள் ஊர்மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை புது கிராமம் கிளை செயலாளர் ஜேபிஆர் மணி செய்து இருந்தார்.