கருங்கல், செப்- 18
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தேச விரோதி என்று விமர்சனம் செய்த பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பு குழு தலைவர் எச். ராஜாவை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கருங்கலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமை வகித்து விளக்கவுரையாற்றினார். காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு பொருளாளர் விஜய்வசந்த் எம்.பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகைகத்பட், மேற்கு மாவட்ட தலைவர் பினுலால்சிங், மீனவர் பிரிவு மாநில தலைவர் ஜோர்தான் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகர, பேரூர், கிராம கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்