அக். 3
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழாவை காங்கிரஸ் கட்சியினர் ஜெயந்தி விழாவாக கொண்டாடி வருகின்றனர் இந்நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத நல்லிணக்கத்தை போற்றுவோம் என்றும்
மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த கோரி நடைப்பயணம் மாநகர் மாவட்ட தலைவர் ஆர். கிருஷ்ணன் தலைமையில் ரயில் நிலையம் முன்பு இருந்து துவங்கி நடைபெற்றது.
முன்னதாக ரயில் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற நடை பயணத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால்சாமி
வி .ஆர் .ஈஸ்வரன் துணைத்தலைவர் கதிரேசன் ஈஸ்வரமூர்த்தி சிறுபான்மை பிரிவு ஹசன் காஜா மாநகர செயலாளர் பாகனேரி ரவீந்திரன் மெடிக்கல் குருசாமி முன்னாள் செயலாளர்M.P
சாதிக் இளைஞர் அணி அருண் சோஜன் மேத்யூ சிவாஜி மன்றம் துரைசாமி சிவாஜி செந்தில் வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம் மகளிர் அணி தீபிகா விக்டோரியா இந்துமதி ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.