தருமபுரியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை முற்றிலும் புறக்கணித்த பாரதிய ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தீர்த்த ராமன் முன்னாள் எம்.பி. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் வேடியப்பன் வரவேற்று பேசினார் பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், கிருஷ்ணன், சண்முகம், ஜெய்சங்கர் ,வட்டார தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய பட்ஜெட் டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பப்பட்டது. இதில் நகர தலைவர்கள் ராபர்ட், குமரவேல்,கணேசன், தங்கராஜ், ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாரதிய ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics