காவேரிப்பட்டணம்,ஜன.31
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினம் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் எல்.சுப்பிரமணி தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டார தலைவர் செல்வராஜ், அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் உறுப்பினர் முத்துக்குமார், முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மை பிரிவு தலைவர் முஸ்தபா, நகர துணை தலைவர் ஸ்ரீராம், மாவட்ட கலை பிரிவு துணைத் தலைவர் தேவேந்திரன், மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீ ராமுலு, மாவட்ட பொது செயலாளர் சரவணன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி,நகர பொது செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்