மதுரை ஜூலை 28
மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து மதுரை தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது
மத்திய பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் அப்பட்டமான அரசியல் பாகுபாடு காட்டப்பட்டதாக கடும் குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
குறிப்பாக தமிழகம் வஞ்சிக்கப்பட்டதால் பிரதமர் மோடி தலைமையில் நடக்க இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்று வருகிறது. என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது. நகரத் தலைவர் கரிசல்பட்டி சௌந்தர பாண்டி துணைத் தலைவர் சரவணன் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட எஸ்.எஸ். டி பிரிவு தலைவர் ராஜா தேசிங்கு பிசிசி மெம்பர்கள் ராஜ்குமார் உலகநாதன் சுப்பிரமணியன் மாவட்ட துணைத் தலைவர் அன்னக்கொடி உட்பட வட்டார தலைவர்கள் முருகேசன் வீரபத்திரன் தளபதிசேகர் ஆறுமுகம் பாண்டியன் புதுராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.