கிருஷ்ணகிரி: அக்டோபர் :22:கிருஷ்ணகிரி வட்டம், காட்டிநாயனப்பள்ளி அருள்மிகு ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை மூலம், திருக்கோயில் சார்பில் 9 இணைகளுக்கு திருமணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன் அவர்கள் முன்னிலையில் நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.50 ஆயிரம் மதிப்பில் கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசைகள் வழங்கி கடந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 1100 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இந்த வருடமும் 700 இணைகளுக்கு திருக்கோயில் சார்பில் ரூ.10 ஆயிரம் உயர்த்தி 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.60 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காட்டிநாயனப்பள்ளி அருள்மிகு ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 9 இணைகளுக்கு திருமணம் நடத்தப்பட்டு 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.60 ஆயிரம் மதிப்பில் கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் .மு.ஜோதிலட்சுமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் .ரஜினிசெல்வம், வட்டாட்சியர் .பொன்னாலா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் .சின்னசாமி, .சின்னராசு, .விஜயகுமார், .கலைவாணி, செயல் அலுவலர்கள் .சிவக்குமார், .சித்ரா, .மல்லிகா, .சின்னசாமி, .செந்தில், .சிவா, தலைமை அலுவலக கண்காணிப்பாளர் .கோவிந்தராஜ், அருள்மிகு ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி கோயில் பரம்பரை அறங்காவலர் .கிருஷ்ணசந்த் மற்றும் ஆய்வாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மணமக்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.