ஈரோடு மார்ச் 13
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
ஈரோடு மாவட்டம்
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் தொழில் உரிம கட்டணத்தினை காலதாமதமின்றி செலுத்திட வேண்டும்.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நிலுவை மற்றும் நடப்பாண்டு வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் தொழில் உரிம கட்டணம் தற்போது வசூல் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து கிராம ஊராட்சி பொது மக்களும் வருகிற 31 ந் தேதிக்குள் வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் தொழில் உரிம கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாய மாகும்.
எனவே அனைத்து கிராம ஊராட்சி பொது மக்களும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயோ, வரி வசூல் முகாம்களிலோ, ஊராட்சி களப்பணியாளர்களிடமோ அல்லது வீட்டுவரி இணையதளம் மூலமாகவோ டெபிட் கார்டு கிரெடிட் மூலமோ வரியை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி முறையாக வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கையும், தண்ணீர் வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.