கோவை ஜன:13
கோவை மாவட்டம் கவுண்டர் மில் பகுதியில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி,தஞ்சாவூர் இராமகிருஷ்ணா மடம் மற்றும் சுவாமி விவேகானந்தா கல்வி நிலையம் ஆகியோர் இணைந்து இளைஞர்களுக்கான மாநாடு கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.
இந்தியா வல்லரசாக மாறுவதற்கு நமது நாட்டில் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பது அவசியம் என சிறப்பு விருந்தினராக சென்னை ஐ.ஐ.டி.இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.
கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குனர் வாசுகி தலைமை தாங்கினார்.இதில் சுவாமி நரசிம்மானந்தா ஜி,
முர்த்தானந்தா ஜி,ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மாநாட்டில் சவால்களை எதிர் கொள்வதில் சுவாமி விவேகானந்தரின் தன்னம்பிக்கை,இளைஞர்கள் சமுதாய மாற்றத்தின் முக்கிய தூண்கள் என இளைஞர்களின் முன்னேற்றங்களுக்கான தேவையான கருத்துக்கள் தொடர்பாக முக்கிய விருந்தினர்கள் உரையாற்றினர்.
தொடர்ந்து பேசிய உயர் கல்வி சேர்க்கை விகிதம் புள்ளி விவரங்கள் அடிப்படையில் தமிழகம் 50 சதவீதமாக இருப்பதாக கூறிய அவர்,நமது நாடு 27 சதவீதம் மட்டுமே இருப்பதாக தெரிவித்தார்.
நவீன தொழில் நுட்பங்களை நாமே உருவாக்கி தொழில் முனைவோர்களாக மாறுவதற்கு இனி இளைஞர்கள் தயாராக வேண்டும் என அவர் வேண்டு கோள் விடுத்தார்.