சங்கரன்கோவில். நவ.14.
சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனையில் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஓய்வு அறையை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் திறந்து வைத்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து பணிமனையில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கடந்த 2021 ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 400 போக்குவரத்து தொழிலாளர்கள் தாங்கள் ஓய்வு எடுக்கும் அறை முறையாக பராமரிக்க படவில்லை எனவும், ஆஸ்பெட்டாஸ் சீட் போடப்பட்டுள்ளதால் ஓய்வு எடுக்க சிரமமாக உள்ளதாகவும் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர் .அவர்களிடம் பேசிய எம்எல்ஏ ராஜா இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதனை ஆய்வு செய்து சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் புதிய ஓய்வு அறை அமைக்க முடிவு செய்து சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 25 லட்சம் ஒதுக்கி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ உத்தரவிட்டார். இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட ஓய்வு அறை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது .நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துறை துணை மேலாளர் (தொழில்நுட்பம்) சங்கரநாராயணன் தலைமை வகித்தார். ஒழுங்கு நடவடிக்கை மேலாளர் மாரியப்பன், பணிமனை மேலாளர் பாலசுப்ரமணியன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் ,நகராட்சி கமிஷனர் சபாநாயகம், தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் புதிய ஓய்வு அறையை திறந்து வைத்தனர். இதில் திமுக மாவட்ட துணை செயலாளர் புனிதா, மாவட்ட பொருளாளர் சங்கை இல. சரவணன், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர அவைத் தலைவர் முப்பிடாதி, நகர துணை செயலாளர் முத்துக்குமார், போக்குவரத்து தொமுச கிளை தலைவர் சங்கர்ராஜ், நிர்வாகிகள் குருசாமி, ராஜ், செல்வகுமார் ,சிவராமச்சந்திரன் வீரக்குமார், செந்தில்குமார், முருகன், தலைவர்பாண்டியன், பண்டாரக்கண்ணு, கணேசன் ,வசந்தராஜ், வேல்சாமி, மாவட்ட பிரதிநிதி ஸ்தோவான், மின் வாரிய தொமுச திட்ட செயலாளர் மகாராஜன், அரசு ஒப்பந்ததாரர் கேஎஸ்எஸ் மாரியப்பன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார் ,மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால் , அஜய்மகேஷ்குமார், ஜெயக்குமார், சிவாஜி, பாலாஜி, யாசர், விக்னேஷ்,முபின், கோதர், ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.