கலெக்டரிடம், பாதிக்கப்பட்டோர் மனு
திருப்பூர், அக். 23:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜிடம், கவுன்சிலர் பி.ஆர்;.செந்தில்குமார் மற்றும் தவ்ஹீத் ஜமாத் மாவட்ட துணைச்செயலாளர் முகமது பர்கத்துல்லா மற்றும் பொதுமக்கள் பலர் ஒரு மனு கொடுத்தனர்;. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது
தீபாவளி பண்டு சீட்டு கருமாரம்பாளையத்தை சேர்ந்த வடக்கு மாவட்ட பா.ஜ.க. தொழில் பிரிவு மண்டல செயலாளர் செந்தில்குமார் நடத்தி வந்தார். கடந்த 16ம் தேதி மக்களுடைய பணத்தை கொடுக்காமல் அந்த பகுதியில் அன்றாடம் கூலி வேலை செய்யும் பொதுமக்களுடைய பல கோடி ரூபாயை மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டார்.
இது சம்பந்தமாக திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தோம். இது தொடர்பாக நடவடிக்கை இல்லை. எனவே செந்தில்குமார் வீட்டையும் அவருடைய இடத்தையும் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவருடைய பார்ட்னர் ஆனந்த், ஆண்டிகுமார், கண்ணன்,ராஜதுரை, இவர்களை அழைத்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
————-