சென்னை ஜூன் 18
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
மேற்குவங்கம் டார்ஜிலிங்கில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிக் கொண்டதில் 15 பேர் உயிரிழந்திருப்பதும் பலர் படுகாயமடைந்திருப்பதும் வேதனைக்குரியது.
ரயில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தீவிர உயர்தர சிகிச்சை அளித்து அவர்கள் விரைவில் குணமடைய மேற்குவங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
மேலும்
விபத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகளை வேகப்படுத்த வேண்டும் இந்த
விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து மீண்டும் இது போன்ற
ரயில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க மத்திய ரயில்வே துறை தனிக்கவனம் செலுத்த வேண்டும்
ரயில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.