திருப்பூர் ஜூலை:18
வடக்கு சட்டமன்ற தொகுதி மாநகராட்சி வார்டு எண் 7 போயம்பாளையம் சக்தி நகர் அருகிலுள்ள எஸ்வி அவின்யூ பகுதியில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட்சாலை
அமைக்கும் பணிக்கு திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்
கே என். விஜயகுமார் எம்எல்ஏ பூமி பூஜைசெய்து துவக்கி வைத்தார். உடன் மண்டலத் தலைவர் கோவிந்தராஜ், மாமன்ற உறுப்பினர் கவிதா விஜயகுமார், வட்டக் கழகச் செயலாளர் விஜயகுமார், கூட்டுறவு சொசைட்டி தலைவர் நீதி ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.