திண்டுக்கல்
வக்கம்பட்டி பாலா படிப்பகத்தில் உயர்நிலைப்பள்ளி படிக்கும் மாணவர்களுக்கான கற்றல் நெறிப்படுத்துதல் வேனிற் காலம் முகாம் நிறைவு நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பழனிக்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துரை கூறினார். பாலா படிப்பகத்தின் நிறுவனரும் நெல்லை மாநகர காவல் ஆணையருமான முனைவர் பா.மூர்த்தி காணொளி மூலம் மாணவர்களுக்கு அறிவுரைகளும் வாழ்த்தும் வழங்கினார்.
மாணவர்களின் திறன் வெளிப்பாட்டு நிகழ்வுகளும்,கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பாலா படிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் லயன் நல் நாகராஜன் அவர்கள் நன்றி கூறினார். முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் ஆர். மனோகரன் “கனவு ஆசிரியர்”ச.சவரி மணி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவினை பங்கேற்பு மாணவர்களே தொகுத்து வழங்கி சிறப்பித்தனர்.