நாகர்கோவில் ஜூன் 1
குமரி மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தோழர் நாடாளுமன்ற உறுப்பினர், 10ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த உழைக்கும் மக்களின் ஒப்புயர்வற்ற தலைவர் தோழர் கே.பாலதண்டாயுதம் 51 வது நினைவஞ்சலி கூட்டம் நாகர்கோவில் வைத்து நடைபெற்றது. நிகழ்வுக்கு அனைத்திந்திய முற்போக்கு பேரவையின் மாநில துணைத் தலைவரும் குமரி மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தோழருமான எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார். ஆரல் கிளையின் மூத்த தோழர் சுந்தரம் நினைவஞ்சலி நிகழ்வை துவக்கி வைத்தார்.நிகழ்வில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் தா.சுபாஷ் சந்திர போஸ், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட துணைத்தலைவர் ஆரல் பகவதி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் நாகர்கோவில் மாநகர செயலாளர் தோழர் ஆர்.இசக்கிமுத்து , பொருளாளர் தோழர் கே.நாகராஜன்,இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் குமரி மாவட்ட செயலாளர் தோழியர் செல்வராணி, ஆரல்கிளைச்செயலாளர் வி.அருள்குமார், ஆரல் புஷ்பராஜ் ,குருசாமி, முன்னாள் நகரச்செயலாளர் எல்.சுப்பிரமணியம், பூதைகிளைச்செயலாளர் தா.மகேஷ் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தோவாளை தாலுகா செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் தக்கலை ராஜு , நாகப்பன், சிங், சுரேஷ், கண்ணண் உட்பட பலர் கலந்து நினைவஞ்சலி செலுத்தினர்.