மதுரை செப்டம்பர் 30,
மதுரையில் பணி நிறைவு பாராட்டு விழா
மதுரை பாண்டி கோவில் அருகே
ஆர் ஆர் மஹாலில் தமிழ்நாடு மேல் நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் ஆசிரியர் இரா.பிரபாகரன் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில சிறப்பு தலைவர் முனைவர் மாணிக்கவாசகன் தலைமையில் மாநில தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்பு வழங்கினார். மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் இராமு, மாநில அமைப்பு செயலர் இராஜேந்திரன், மாநில தலைமையிட செயலர் அரிக்கிருஷ்ணன், மாநில மகளிரணிச்செயலர் ஆண்டாள்,
மாநில துணைத்தலைவர் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
இந்த பணி நிறைவு பாராட்டு விழாவில் 36 ஆண்டு காலம் கழகத்தின் உறுப்பினர் நிலையிலிருந்து பயணம் செய்து கழகத்தின் பல்வேறு பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றியவர் மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன் என்று
மாநில சிறப்பு தலைவர் பாராட்டினார்.
மேலும் மாவட்ட தலைவர் சதீஷ் குமார் நன்றி உரை வழங்கினார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், விழா குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்