கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கயத்தாறு யூனியன், குருமலை கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை மாவட்ட கவுன்சில் பிரியா குருராஜ் , ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். இந்நிகழ்வில் குருமலை நாட்டாமை சேகர், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாரிச்சாமி, வெங்கடேஸ்வரபுரம் திமுக கிளை செயலாளர் கார்த்திக், கம்மாபட்டி கிளைச் செயலாளர் அய்யாதுரை, குருமலை இளைஞரணி சார்பாக அருள் பாண்டியன், முத்துக்குமார், மாரிமுத்து ,
குருமலை வி பி சிங் நகர் கிளைச் செயலாளர் உத்திரகுமார், ராஜா புதுகுடி பால்ராஜ், கயத்தாறு மகேந்திரன் மற்றும் மகளீர் அணியினர் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், கலந்து கொண்டனர்..