நாகர்கோவில் – அக் – 24,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் நாகர்கோவில் அடுத்த மங்காவிளை பகுதியை சேர்ந்த மாற்றுதிறனாளி ஜெகன் (45) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நான் மேற்படி முகவரியில் நானும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறேன். பிலாவிளை பகுதியை சேர்ந்த ஸ்ரீ லிங்கம் என்பவர் மகன் தனேஷ் (38) திருமணமாகி விவாகரத்து பெற்று சுமார் இரண்டு ஆண்டுகளாக தனிமையில் இருந்து வருகிறார் . நான் எனது மகள்களுடன் மார்த்தாண்டம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பணச்சமூடு, தேவி கோடு பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்த போது தனேஷ் அப்பகுதியில் பெயின்டிங் வேலைக்கு வந்ததை அடுத்து நட்பின் பெயரில் எனது வீட்டின் அருகில் வாடகை வீட்டில் குடியிருக்க வந்தார். இவர் எனது இருமகள்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததால் நான் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்தனர். (புகார் எண் 17/2024 ) இன் அடிப்படையில் 7/10/2024 அன்று அவர் நீதி மன்ற சிறையில் அடக்கப்பட்டார். இந்த வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்றும், புகார் கொடுத்த என்னையும் என் குழந்தைகளையும் கொலை செய்து விடுவேன் என்று அடையாளம் தெரியாத நபர்கள் நேரில் அடிக்கடி மிரட்டி வருகின்றார்கள்.
இது போன்று எனது நண்பர் கண்னன் என்பவரையும் கடந்த 10/10/2004 அன்று போணில் தொடர்பு கொண்டும் அன்று மாலை 4 மணி அளவில் அவருடைய அலுவலகத்திற்கு எதிரியின் தாயார், தம்பி மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் சென்று மிரட்டி. வழக்கை வாபஸ் பெறும் படி கூறி சென்றுள்ளார்கள், மேலும் தனேஷ் மீது அடிதடி வழக்கு உள்ளனதாகவும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவன் என்பதாலும்
நான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் என்னால் சுயமாக நடக்க இயலாது. ஆகையால் எனக்கும் எனது இரு குழந்தைகளுக்கும் தனேஷ் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்கள் களால் உயிருக்கு அச்சுருத்தலுள்ளது. ஆகையால் தனேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.