நாகர்கோவில் – ஜூன் – 11,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ப்ரணவ் முதலீடு மீட்பாளர்கள் நல சங்கம்கன்னியாகுமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் உறுப்பினர்கள் டாக்டர் ஸ்ரீ லட்சுமி, மணி, தினேஷ், உட்பட ஏராளமானோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருந்தனர் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது.
தமிழ் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ப்ரணவ் ஜீவல்லர்ஸ் என்ற ஸ்தாபனம் பல்வேறுகிளைகளை தொடங்கி,நகைக்கான முன்பணம், வைப்புத் தொகை மற்றும் மாத சீட்டு ஆகியவற்றின் மூலம் பல நபர்களிடம் இருந்து கோடி கணக்கில் பணம் பெற்று, பெற்ற பணத்தை ஏமாற்றியும் உள்ளார்கள். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாங்களும் ஏமாறப்பட்டுள்ளோம்.பெண்களிடம் நகை சேமிப்பு திட்டத்தில் சேறுமாறு ஆசைகாட்டி பணத்தை முதலீடு செய்யவும் வைத்துள்ளார்கள். இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே நாகர்கோவில் உள்ள பொருளாதார குற்ற பிரிவிலும் அதனை தொடர்ந்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் மனு அளித்துள்ளோம், அளித்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் எங்களது பின்வரும் கோரிக்கையை தங்கள் பரிசீலிக்கும் படியும்
ப்ரணவ் ஜீவல்லரி என்ற ஸ்தாபனத்தில் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்து ஸ்தாபனம் அடைத்து 8 மாதம் ஆகியும், நாங்கள் புகார் கொடுத்து சுமார் 7 மாதம் ஆகியும், இது வரை எங்களுக்கு புகார் கொடுத்ததற்கு உண்டான ஒப்புகை சீட்டு எதுவும் கொடுக்கப்படவில்லை. நாங்கள் கொடுத்த புகார்க்கு ஒப்புகை சீட்டு வழங்குமாறும்,
இழந்த பணத்தால் எங்களுக்கு மன உளைச்சல் மற்றும் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் வாழ வழி இன்றி இருப்பதாகவும்,
புகார் கொடுத்து பல நாட்கள் கடந்தும், இதுவரை மதன் மற்றும் கார்த்திகா, நாராயணன் மற்ற மேலாளார்- கள் மீது சார்ஜ் ஷீட் பதிவு பண்ணாமல் இருப்பதால் கூடிய விரைவில் சார்ஜ் ஷீட் பதிவு பண்ணுமாறும்,
மதன் மற்றும் கார்த்திகா ஆகியோர் 8 மாதம் காலமாகியும் இன்றும் இழந்த பணத்தை தராமல் காலதாமதம் செய்வதால் எங்கள் சங்கம் சார்பாக அவர்களை சந்திக்க, வழி வகை செய்யுமாறும் ,
மற்ற ஊரில் உள்ள மேலாளர்கள் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க படவில்லை. ஆதலால் மற்ற ஊரில் உள்ள அனைத்து மேலாளர்கள் மீதும் மிக விரை -வாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது