தஞ்சாவூர் ஏப்ரல் 17.
அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேச்சு.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப் பட்டோர் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுத்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிக்காப்பாளர் களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கி பேசியதாவது:
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு பள்ளி, கல்லூரி விடுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பான போக்சோ விழிப்புணர்வு கூட்டம் நடந்தது
பள்ளிகளில் அதிக அளவில் விழிப்புணர்வு பதாகைகளை முக்கியமான இடங்களில் வைக்க வேண்டும். பதாகைகளில் 1098 மற்றும் 14 417 ஆகிய உதவி எண் கள் குழந்தைகள் எளிதில் படிக்கும் வண்ணம் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும். புகார் பெட்டி அனைத்து பள்ளிகளிலும் நிறுவப்பட்டு பயன்பாட்டில் இருப் பதை உறுதி செய்ய வேண்டும் புகார் பெட்டியில் புகார் அளிக்கும் குழந்தையின் விவரங்கள் வெளி வரக் கூடாது என்பது முக்கியமான தால் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படக் கூடாது
கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து பள்ளிகளிலும், குறிப்பாக பள்ளி மாணவ மாணவியர் செல்லும் அறைகள், விளையாட்டு மைதானம், வகுப்பறை முகப்பு, உள்ளே வருவது ,மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் உபயோகப்படாமல் இருக்கும் இடங்களிலும் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலர் ரஞ்சித் குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரபாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி உறுதி

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics