கோவை மே 23
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா காணியம் பாளையம் குப்புசாமி (72) தனது மகனால் சொத்து பங்கீடு தொடர்பாக கொலை மிரட்டல் விடுவதாக நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது பற்றி குப்புசாமி கூறியதாவது கடந்த 1997 ஆம் வருடம் எனது மகன் கிருஷ்ணராஜ் பெயரில் 22 ஏக்கர் நிலத்தை முன்னரே பாகம் செய்து கொடுத்து விட்டேன் தற்போது இருக்கும் மீதம் உள்ள 8.19 ஏக்கர் நிலத்தின் நான் விவசாயம் செய்து வருகிறேன். இந்த சூழலில் எனது மகன் எனது சொத்தை அபகரிக்கும் நோக்கோடு என்னை கொலை மிரட்டல் விடுவதோடு தான் குடியிருந்த வீட்டை விட்டும் வெளியே அனுப்பி விட்டார். எனது மகன் தனது மாமனாரான திமுக நகர அவைத்தலைவர் அழகப்பன் அவருடைய தூண்டுதலின் பேரில் கட்சி செல்வாக்கை பயன்படுத்தி என்னை மேலும் மேலும் துன்புறுத்தி வருகிறார். என்னுடைய தோட்டத்தில் வேறு நபர்களை தங்க வைத்துள்ளார் அவர்கள் என்னுடைய தோட்டத்திற்கு செல்ல விடாமல் தடுக்கின்றனர். நான் எனது வீட்டில் தங்க இயலாமலும் தோட்டத்திலும் தங்க இயலாமலும் இப்பொழுது நடு ரோட்டில் நிற்கின்றேன் என்னுடைய உயிர் பாதுகாப்பு வேண்டியும், என்னுடைய சொத்துக்கான பாதுகாப்பு வேண்டியும் நெகமம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளேன். எனக்கு நீதி கிடைக்கும் என நான் நம்புகின்றேன்.