கிருஷ்ணகிரி அக்: 07
கிருஷ்ணகிரியில் காவல்துறை சார்பில் சமுதாயக் கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை உத்தரவின் பெயரில் டிஎஸ்பி முரளி அறிவுரையின்படி கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு தலைமையில் கிருஷ்ணகிரி ஜெக்கப்பன்நகர் மற்றும் பழையபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சிசிடிவி கேமரா முக்கியத்துவம், இணைய வழி குற்றங்கள், பொருளாதார குற்றங்கள், சாலை பாதுகாப்பு, சட்டவிரோத செயல்களான கஞ்சா, குட்கா, லாட்டரி, அரசு மதுபானம், கள்ளச்சாராயம் விற்பனை, மணல் கடத்தல், விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் அளிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் இது குறித்து தகவல் தெரிந்தால் 24 மணி நேரமும் டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமான புகார் தெரிவிக்க இலவச அழைப்பு எண் 181 மூலமாகவும் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை சம்பந்தமாக 10581 மற்றும் 1077 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் மதன், சுரேஷ்குமார், ஜோதிசுகுமார், ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் குமரேசன், எஸ்.ஐ.,க்கள் அண்ணாமலை, சத்யன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.